செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

வெளிமார்க்கெட்டில் ரூ.300 கோடி கடன் வாங்க கவர்னர் அனுமதி

Published On 2020-10-05 09:42 IST   |   Update On 2020-10-05 09:42:00 IST
வெளிமார்க்கெட்டில் ரூ.300 கோடி கடன் வாங்க கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை அரசிடம் இருந்து கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு 37 கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

ஏனாம் பெருந்தலைவர் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியை ஜூனியர் கல்லூரியாக தரம் உயர்த்துதல், நிதித் துறையின் கீழ் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக வெளி மார்க்கெட்டில் ரூ.300 கோடி கடன் வாங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தாழ்த்தப்பட்டோருக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 597 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு 2 தவணையாக மத்திய பங்குத்தொகை ரூ.3 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் வழங்குதல், மடுகரை மரகதவள்ளி அம்மாள் கோவிலில் அறங்காவல் குழு அமைத்தல், மகளிர் மேம்பாட்டுதுறையின் கீழ் 1 லட்சத்து 54 ஆயிரத்து 847 முதியோருக்கு செப்டம்பர் மாத முதியோர் பென்ஷனுக்காக ரூ.29 கோடியே 65 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.

இந்த தகவலை கவர்னர் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.

Similar News