செய்திகள்
கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஜிபி வெங்கிடு

கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு கொரோனாவுக்கு பலி

Published On 2020-09-24 01:52 GMT   |   Update On 2020-09-24 01:52 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.பி.வெங்கிடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜி.பி.வெங்கிடு. தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 1996- 2001-ம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து உள்ளார். மேலும் கோபி நகர தி.மு.க. செயலாளர், தலைமை கழக பேச்சாளர், பொதுக்குழு உறுப்பினர் உள்பட கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும், கோபி நகராட்சி கவுன்சிலராகவும் இருந்து உள்ளார். அதுமட்டுமின்றி மொழிப்போர் தியாகியான இவர் தி.மு.க. நடத்திய பல போராட்டங்களில் பங்கேற்று சிறைக்கு சென்றவர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜி.பி.வெங்கிடு, கடந்த சில நாட்களாக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 86. ஜி.பி.வெங்கிடுவுக்கு திரிபுராம்பாள் என்ற மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News