செய்திகள்
தேர்வு

புதுவை பல்கலைக்கழகம் அனுமதி- புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்

Published On 2020-09-21 08:42 GMT   |   Update On 2020-09-21 08:42 GMT
புதுவை பல்கலைக்கழகம் அனுமதி அளித்ததையடுத்து, மாணவ-மாணவிகள் புத்தகங்களை தேர்வு மையத்துக்குள் எடுத்து சென்று பார்த்து தேர்வுகளை எழுதினார்கள்.
புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 72 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.

இந்த இணைப்பு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி பருவ தேர்வுகள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் கடந்த 14-ந் தேதி முதல் 19-ந்தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இது, குறுகிய காலமாக இருந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், இணைப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு, இன்று (21-ந்தேதி) முதல் நடக்கிறது.

அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இறுதி பருவ தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வினை இணைப்பு கல்லூரிகளில் பயிலும் 10 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்த தேர்வை மாணவர்கள் புத்தகம் அல்லது குறிப்புகளை பார்த்து எழுதலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.

இது, ஒரு வித்தியாசமான நடைமுறையாக காணப்பட்டாலும் சில கல்வி நிலையங்களில் இந்த முறைக்கு அனுமதிக்கிறார்கள். அந்த அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகமும் அனுமதித்தது.

இதனால் மாணவ-மாணவிகள் புத்தகங்கள் மற்றும் குறிப்புகளை கையோடு தேர்வு மையத்துக்குள் எடுத்து சென்றனர். அவற்றை பார்த்து தேர்வுகளை எழுதினார்கள்.

Tags:    

Similar News