செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் இன்று 490 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-18 12:54 IST   |   Update On 2020-09-18 12:54:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 490 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,913 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 52,14,678 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,174 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 84,372 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,913ஆக உயர்ந்துள்ளது.

Similar News