செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

கொரோனா தடுப்பு பணி: மருத்துவர்களுடன் நாராயணசாமி ஆலோசனை

Published On 2020-09-12 11:34 IST   |   Update On 2020-09-12 11:34:00 IST
கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை கண்காணிக்க அரசு சார்பில் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிக்கும் ஒரு டாக்டர் நியமிக்கப்பட்டனர். இந்த மருத்துவ குழுவானது வாரந்தோறும் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சட்டபேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளரும், மாவட்ட கலெக்டருமான அருண், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள், டாக்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவர்கள் விளக்கி கூறினர். கொரோனா தடுப்பில் பணியில் இன்னும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Similar News