செய்திகள்
விமானம் (கோப்புப்படம்)

சென்னைக்கு சிகிச்சைக்காக சிறுமியுடன் சிறப்பு விமானத்தில் வந்த தம்பதி

Published On 2020-09-12 07:40 IST   |   Update On 2020-09-12 07:40:00 IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் சிறுமியுடன் வந்த தம்பதியினர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
ஆலந்தூர்:

கொரோனா ஊரடங்கு காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 6 மாதங்களாக இந்தியா திரும்ப முடியாமல் சிக்கி தவித்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்திய தூதரகம் மூலமாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 160 மருத்துவ மாணவர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டனர். இந்த விமானத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு சிறுமிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று பெற்றோருடன் வர அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணம் செய்த அனைவரும் குடியுரிமை, சுங்கச்சோதனைகள் முடிந்து சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சிறுமியுடன் வந்த தம்பதியினர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

Similar News