செய்திகள்
விபத்துக்குள்ளான கார் - லாரி

விருத்தாச்சலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Published On 2020-09-08 14:05 IST   |   Update On 2020-09-08 14:05:00 IST
விருத்தாச்சலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

கோவிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News