செய்திகள்
8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

அரூர் அருகே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டம்

Published On 2020-08-13 13:03 IST   |   Update On 2020-08-13 13:03:00 IST
அரூர் அருகே எருமியாம்பட்டியில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரூர்:

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாக்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அரூர் அருகே உள்ள எருமியாம்பட்டியில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் நேற்று கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விவசாய நிலங்களில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகளையும் ஓட்டி வந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள விளை நிலங்களை பறிக்கும் வகையில் உள்ள 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Similar News