செய்திகள்
ஈரோடு மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
ஈரோடு மாவட்ட எல்லையில் இ-பாஸ் இல்லாதவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஈரோடு:
நேற்று அதிகாலையில் இருந்தே இ-பாஸ் இல்லாத வாகனங்கள் எல்லையை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் காலை நேரத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து சந்தை செல்லவும், வேறு பணிகளுக்காகவும் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்தனர். அவர்கள் அனைவரும் இ-பாஸ் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
காலை 8 மணியில் இருந்து அலுவலகங்கள் செல்பவர்கள், கடைகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் என ஏராளமானவர்கள் வந்தனர். வேலைக்கு சென்றால்தான் கூலி கிடைக்கும் என்ற நிலையில் இருப்பவர்கள் தங்கள் சூழ்நிலையை போலீசாரிடம் கூறினார்கள். போலீசார் அரசின் உத்தரவை கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினார்கள். இதுபோல் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பகுதிக்கு செல்வதற்காக வந்தவர்களையும் போலீசார் திருப்பி அனுப்பினார்கள். இதனால் கருங்கல்பாளையம் காவிரி பாலம் பகுதி கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை அமலில் உள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் இடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட கலெக்டர்கள் முதல்-அமைச்சரிடம் வைத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்டங்கள் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் எல்லைப்பகுதி சோதனைச்சாவடிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.