செய்திகள்
கோப்புப்படம்

கடலூர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-23 14:24 IST   |   Update On 2020-06-23 14:24:00 IST
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 883-ஆக உயர்ந்துள்ளது.
கடலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 823 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று மேலும் 60 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 883ஆக உயர்ந்துள்ளது.

கடலூரில் இதுவரை கொரோனாவுக்கு 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

Similar News