செய்திகள்
வெள்ளையன்

த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

Published On 2020-06-05 07:16 IST   |   Update On 2020-06-05 07:16:00 IST
வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.
ஆலந்தூர்:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன்(வயது 73). இவர், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் த.வெள்ளையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட த.வெள்ளையன், உடல் நலத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar News