செய்திகள்
புதுச்சேரியில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மனைவி, மகள், நண்பர் என மொத்தம் 3 பேருக்க கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.