விளையாட்டு
Tharun Mannepalli | சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தருண் மனேபள்ளி தோல்வி
- சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதன் காலிறுதியில் இந்திய வீரர் தருண் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தருண் மனேபள்ளி, இந்தோனேசியாவின் அந்தோணி கின்டிங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீரர் முதல் செட்டை 21-19 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தருண் மனேபள்ளி 21-19 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இந்தோனேசிய வீரர் கின்டிங் 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் தருண் மனேபள்ளி நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.