செய்திகள்
பேஸ்புக்

திருமணத்தை வீட்டிலிருந்து பேஸ்புக், யூடியூப்பில் பாருங்கள்- என்ஜினீயரின் வித்தியாசமான அழைப்பிதழ்

Published On 2020-04-22 10:49 GMT   |   Update On 2020-04-22 10:49 GMT
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட என்ஜினீயர் அதற்கான திருமண பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கோவை:

கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பாபு. என்ஜினீயரான விக்னேஷ் பாவுக்கும், பிரவீனா என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது வருகிற 26-ந்தேதி திருமணத்தை நடத்த அவர்களது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமணத்தை உறவினர்கள் அனைவரையும் அழைத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்ட என்ஜினீயர் விக்னேஷ் பாபு அதற்கான திருமண பத்திரிகை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் ‘ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்து நிலைமை சீர் அடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். மேலும் வீட்டில் வைத்து நடக்கும் எங்களது திருமணத்தை நேரடியாக பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் ஒளிபரப்ப உள்ளேன். அதில் பார்த்து தாங்கள் மணமக்களை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
Tags:    

Similar News