செய்திகள்
புதுமண தம்பதிகள் மேடையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்திட்ட காட்சி.

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி கையெழுத்திட்ட புதுமண தம்பதியினர்

Published On 2020-02-10 09:58 IST   |   Update On 2020-02-10 09:58:00 IST
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மணமேடையில் புதுமண தம்பதியினர் கையெழுத்திட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி திமுக மாணவரணி அமைப்பாளர் சபீர் அன்சில் என்பவருக்கும், சாஜிதா பர்வீன் என்பவருக்கும் நேற்று புளியம்பட்டி ஹரிணி மகாலில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் முடிந்ததும் மணமேடையில் மணமகன், மணமகள் இருவரும் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.

இதேபோல் திருமணத்திற்கு வந்த பெரும்பாலான பெண்களும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், புளியம்பட்டி நகர செயலாளர் சிதம்பரம், இ.கம்யூ முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இளங்கோ உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News