செய்திகள்
கைது

பந்தலூர் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய அண்ணன் கைது

Published On 2020-01-24 15:59 IST   |   Update On 2020-01-24 15:59:00 IST
பந்தலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-2 மாணவியை மிரட்டி கற்பழித்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி:

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முர்ஷிது(வயது22). இவர் அடிக்கடி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வசித்து வரும் தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து செல்வார்.

அப்போது அவரது பெரியப்பா மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அந்த மாணவியை மிரட்டி முர்ஷிது பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் மாணவியை கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர்.

அப்போது மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து தேவாலா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் முர்ஷிது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News