செய்திகள்
திமுக

சிவகங்கை மாவட்டத்தில் 77 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க.

Published On 2020-01-03 10:22 IST   |   Update On 2020-01-03 10:22:00 IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 77 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. 67 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 161 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக களம் கண்டது.

இந்த நிலையில் நேற்று இதற்கான வாக்கு எண்ணும் பணி அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற்றது. பிற்பகலுக்கு பின்னர் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பானது. பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

இதனிடையே 161 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 153 இடங்களுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 77 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 67 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 9 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மீதம் உள்ள 8 இடங்களில் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

காளையார் கோவில் ஒன்றியம்
மொத்தம் - 19
அதிமுக -4
திமுக-4
சுயேச்சை-3
முடிவு அறிவிக்கப்படாதவை 8

திருப்புவனம் ஒன்றியம்
மொத்தம்- 17
அதிமுக- 3
திமுக - 8
அமமுக- 4
தமாகா-2

தேவகோட்டை
மொத்தம் -14
அதிமுக -8
திமுக-5
அமமுக-1

சாக்கோட்டை
மொத்தம் -11
அதிமுக -5
திமுக - 3
காங்கிரஸ்-2
சுயேச்சை-1

திருப்பத்தூர்
மொத்தம்- 13
அதிமுக-2
திமுக -10
சுயேச்சை-1

கண்ணங்குடி
மொத்தம்-6
அதிமுக -4
திமுக -2

இளையாங்குடி
மொத்தம் - 16
அதிமுக-8
திமுக-7
சுயேச்சை-1

கல்லல்
மொத்தம் - 16
அதிமுக-7
திமுக-7
காங்கிரஸ்- 2

சிவகங்கை
மொத்தம்-18
அதிமுக-9
திமுக-7
அமமுக-1
சுயேச்சை-1

மானாமதுரை
மொத்தம் - 14
அதிமுக- 5
திமுக-8
அமமுக-1

சிங்கம்புணரி
மொத்தம் - 10
அதிமுக-4
திமுக-4
தேமுதிக-1
சுயேச்சை-1

எஸ்.புதூர்
மொத்தம் - 7
அதிமுக- 4
திமுக -3

Similar News