செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும்- அன்புமணி

Published On 2019-12-11 09:44 GMT   |   Update On 2019-12-11 09:44 GMT
குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கை தமிழர்களை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பெரிய பெரிய வெங்காய மண்டி வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்கி வைத்தது தான் விலை உயர்வுக்கு காரணம். வட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாமதமாக வெங்காயத்தை இறக்குமதி செய்திருக்கிறது. வெங்காயத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியுரிமை சட்ட மசோதாவில் இலங்கையும் சேர்க்க வேண்டும். இலங்கையில் முப்பது ஆண்டு காலமாக தமிழர்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. தற்போது உள்ள பிரதமர், ஜனாதிபதி எல்லோரும் போர்க்குற்றவாளிகள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் இலங்கையையும் சேர்க்கவேண்டும். ஏற்கனவே அகதி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை தர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News