செய்திகள்
இல கணேசன்

பக்தியுள்ள பெண்கள் சபரிமலை போக மாட்டார்கள் - இல.கணேசன்

Published On 2019-11-15 07:45 GMT   |   Update On 2019-11-15 07:45 GMT
பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள் என்றும் சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும் என்றும் பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
காரைக்குடி:

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் திருமணம் காரைக்குடியில் இன்று நடைபெற்றது. திருமணத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, மனித உயிர் மலிவாக போய்விட்டது. மதுபோதைக்கு இளைஞர்கள் அடிமையாகிறார்கள். இதனை தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் பதவியிடங்கள் காலியாக உள்ளது.



பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள். சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும். தமிழகத்தில் தலைமை தாங்கும் பண்பு நிறைய பேரிடம் உள்ளது. வெற்றிடம் என்பது மாயை ஆகும் என்றார்.

திருமணத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பா.ஜனதா வரவேற்கிறது. ரஜினிக்கு காவி சாயம் பூச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் கூட்டணி குறித்து பா.ஜனதா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.

ஆன்மீக அரசியலும், அறம் சார்ந்த அரசியலும் தமிழகத்துக்கு தேவை. சபரிமலை தீர்ப்பு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

Tags:    

Similar News