செய்திகள்
சபினா

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் என்ஜினீயர் தற்கொலை

Published On 2019-10-07 08:54 GMT   |   Update On 2019-10-07 08:54 GMT
கடலூரில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்த சரவணன் மகள் சபினா (வயது 21) என்ற என்ஜினீயருக்கும், சிதம்பரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடைசாமி மகன் பாவேந்தன் என்பவருக்கும், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அப்போது நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்தனர். மேலும் டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களையும் வாங்கி தருவதாக கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், சீர்வரிசை பொருட்களை கேட்டு சபினாவை கணவர் பாவேந்தன் மற்றும் அவரது பெற்றோர் துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த சபினா, கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு சென்றதும், பாவேந்தன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சபினா விஷம் குடித்தார். இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில், பாவேந்தன், அவரது தந்தை பாவாடைசாமி, தாயார் அஞ்சா ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News