செய்திகள்
சாலை மறியல் செய்தவர்களை படத்தில் காணலாம்.

பாலியல் கொடுமைக்கு விதவை பெண் பலி- அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல்

Published On 2019-10-04 12:13 GMT   |   Update On 2019-10-04 12:13 GMT
நெய்வேலியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விதவை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
நெய்வேலி:

நெய்வேலி பெரியாக்குறிச்சியை அடுத்துகிழக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. அவரது மனைவி திவ்யா (வயது27). கடந்த  மாதங்களுக்கு முன்பு சிவா இறந்து போனார். எனவே திவ்யா 2  குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்து வந்த திவ்யாவிடம் கங்கைகொண்டான் நகர அ.தி.மு.க. செயலாளர் மனோகர் வேலைவாங்கி தருவதாக கூறி ஆதார் கார்டு, ரேசன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து கொண்டு எனது அலுவலகத்துக்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற திவ்யாவை  அ.தி.மு.க. பிரமுகர் மனோகர்  பாலியல் பலாத்காரம்  செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் மனோகரின் மனைவி மகாலட்சுமிக்கு தெரியவந்தது. அவர் எனது கணவருடன் ஏன் பழகுகிறாய் என்று கூறி திவ்யாவை தாக்கி உள்ளார்.

இதனால் மனமுடைந்த திவ்யா எலி மருந்து சாப்பிட்டுள்ளார். அவர் வாந்தி எடுப்பதை கண்ட அவரது குடும்பத்தார் திவ்யாவை மீட்டு உடனடியாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பின்னர் திவ்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் மனோகர் மீது பாலியல் பலாத்காரம், தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மந்தாரக்குப்பம்  பஸ் நிலையம் எதிரில்  ஆர்ப்பாட்டம் செய்தனர். அ.தி.மு.க. நகர செயலாளர் மனோகரன், அவரது மனைவியை கைது செய்ய கோரி கோஷம் போட்டனர். 

இன்று காலையும்  விடுதலை சிறுத்தைகள்கட்சியினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், திவ்யாவின் உறவினர்கள்  மந்தாரக்குப்பம் ஜெயப்ரியா பஸ் நிறுத்தம் பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அ.தி.மு.க.பிரமுகர், அவரது மனைவியை கைது செய்யக்கோரி மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News