செய்திகள்
ஈஸ்வரன்

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்- ஈஸ்வரன்

Published On 2019-10-01 04:27 GMT   |   Update On 2019-10-01 04:27 GMT
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் அதிக இடங்களை கேட்டு போட்டியிடுவோம் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த முள்ளாம் பரப்பில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்களாக கோபி, ஆத்தூர், பொள்ளாச்சியை அறிவிக்க வேண்டும்?. நீர் பாசன திட்டங்களை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் பிரச்சனை தீரும்.

கேரளா சென்ற தமிழக முதல்வர் பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் குறித்து பேசி உள்ளார். மகிழ்ச்சியான செய்தி தான். இதற்கு குழு அமைத்ததோடு நின்று விடக்கூடாது. திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். இந்த திட்டம் மூலம் நீலகிரியில் பெய்யும் மழை முழுமையாக நமது தமிழகத்துக்கு கிடைக்கும்.

உயர் மின் கோபுர திட்டத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கோள்விக்குறியாக உள்ளது. அரசு இது தொடர்பாக விவசாயிகளுடன் பேசி பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை இனியும் தள்ளி போடாமல் நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டும். கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை கொ.ம.தே.க. வலுவாக இருப்பதால் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாம் அதிக இடங்களை கேட்டு போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
Tags:    

Similar News