செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

Published On 2019-09-19 09:49 GMT   |   Update On 2019-09-19 09:49 GMT
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
நாகப்பட்டினம்:

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு, மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவ மழையால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும். இந்த காலங்களில் தான் பாதிப்பு இருக்கும்.

கஜா புயலின்போது மனித உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியது. அதேபோல் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் முன் எச்சரிக்கையாக ஆய்வு கூட்டம் நடந்தது. புயலால் பாதிக்கும் பகுதிகளை 4 வகைகளாக பிரித்து கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தில் 4399 இடங்கள் பாதிக்கப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் இடங்களில் வசிப்பவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிவாரண முகாம்கள், மருத்துவ முகாம்கள் அமைக்கும் பணிகளுக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News