செய்திகள்
நடுரோட்டில் விழுந்து கிடந்த பேனர்.

காவேரிப்பாக்கம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் படுகாயம்

Published On 2019-09-13 05:54 GMT   |   Update On 2019-09-13 08:05 GMT
காவேரிப்பாக்கம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனப்பாக்கம்:

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் திருமண வரவேற்பு பேனர் சென்னை- பெங்களூ தேசிய நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது.

நெமிலியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர் பைக்கில் காவேரிப்பாக்கத்துக்கு வந்தார். காவேரிப்பாக்கம் பஸ்நிலையம் எதிரே சாலையை கடக்க காத்திருந்தார்.

அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் சரிந்து டாஸ்மாக் ஊழியர் தலையில் விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று பேனர் விழுந்து பெண் என்ஜினியர் பலியான சம்பவம் நடந்துள்ள நிலையில் காவேரிப்பாக்கத்தில் பேனர் விழுந்து டாஸ்மாக் ஊழியர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே பேனர் வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அது முறையாக பின்பற்றப்படுகிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்று பொதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News