செய்திகள்
போராட்டம்

ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்

Published On 2019-08-28 09:56 GMT   |   Update On 2019-08-28 09:56 GMT
7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி குடும்பத்துடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பழனிச்சாமி வரவேற்றார். இதில் 100-க்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News