செய்திகள்
காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம் - ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது

Published On 2019-08-22 07:46 GMT   |   Update On 2019-08-22 07:46 GMT
ப.சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்து காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த காங்கிரசார் சிவகங்கை எம்.பி. அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக 1 கி.மீ. தூரத்தில் உள்ள பெரியார் சிலை பகுதிக்கு வந்தனர்.

அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய், விடுதலை செய், ப.சிதம்பரத்தை விடுதலை செய்; கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் ப.சிதம்பரம் கைதை கண்டிக்கிறோம்; மோடி-அமித்ஷா ஒழிக என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

போலீஸ் ஏ.டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, மாவட்ட நிர்வாகி குமரேசன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News