செய்திகள்
எச் ராஜா

மத உணர்வுக்கு எதிராக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்படுகிறார்- எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2019-08-15 05:08 GMT   |   Update On 2019-08-15 05:08 GMT
மத உணர்வுக்கு எதிராக பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்படுவதாக பா.ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
காரைக்குடி:

பா.ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் எச்.ராஜா காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதனை வரவேற்கிறேன்.

பல ஆண்டுகள் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தொகுதி மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தேசத்துக்கு எதிராக அவர் பேசி வருகிறார். எனவே அவர் பூமிக்கு பாரம் தான்.

காஷ்மீர் நடவடிக்கையை காங்கிரஸ் எம்.பி.க்களே வரவேற்று உள்ளனர். ரஜினியும் வரவேற்றுள்ளார். தேசபக்தி உள்ளவர்கள் இதனை ஆதரித்துள்ளனர்.

அண்மையில் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கையில் கயிறு கட்டுவது இந்துக்களின் பழக்கம். எனவே இந்த சுற்றறிக்கையை அவர் திரும்பப்பெற வேண்டும்.

முன்பு பாடப்புத்தகத்தில் இந்தியா எனது தாய் நாடு என உறுதிமொழி இருந்தது. ஆனால் தற்போது இந்தியா என் நாடு என அச்சிடப்பட்டுள்ளது. இதை ஏன் பள்ளி கல்வி இயக்குநர் கவனிக்கவில்லை?

மத உணர்வுக்கு எதிராக செயல்படும் அவரை முதல்வர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாமல் பாராளுமன்றத்தில் சென்றுள்ளார். அவர் ஒரு ஊழல் பெருச்சாளி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News