செய்திகள்
சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரம்

தமிழக வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது- கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்

Published On 2019-08-15 09:50 IST   |   Update On 2019-08-15 09:50:00 IST
மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.
காரைக்குடி:

சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் உள்ளது. இதனால் அவர்கள் எதை வேண்டுமானா லும் அமல்படுத்தி வருகின்றனர்.

தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை பா.ஜனதா அரசு திருத்தி உள்ளது. இனி மத்திய அரசுக்கு எதிராக எந்த கேள்வி கேட்டாலும் சரியான பதில் கிடைக்கப்போவதில்லை.

நதிநீர் இணைப்பு திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பாராளுமன்றத்தில் காவிரி-குண்டாறு திட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு இதுவரை இந்த திட்டத்திற்காக தமிழக அரசு நிதி கோரவில்லை என மத்திய அரசு தெரிவித்தது.

கடந்த 8 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது முதல்வர் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் 5 முறை முதல்- அமைச்சராக இருந்தவருக்கு சிலை வைக்க அனுமதி மறுக்கப்படுவது அரசின் ஒருதலைப்பட்ச செயல்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என்பது பில்லியன் டாலர் கேள்வி? எனக்கு தெரிந்தவரை உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசுக்கு தைரியம் இல்லை என்று நினைக்கிறேன்.

ப.சிதம்பரம் குறித்து முதல்வர் பேசியது கண்டிக்கத்தக்கது.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பேச போதிய நேரம் தருவது இல்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க மத்திய அரசு முயல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News