செய்திகள்

சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்க கடிதம் கொடுப்பேன் - பிரபு எம்எல்ஏ

Published On 2019-05-04 15:36 IST   |   Update On 2019-05-04 15:49:00 IST
சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்க கடிதம் கொடுப்பேன் என்று கள்ளக்குறிச்சி பிரபு எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #ADMK #3ADMKMLAs

சென்னை:

அ.தி.மு.க.வை சேர்ந்த அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய 3 பேரும் டி.டி. வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீசு அனுப்பி இருந்தார்.

இதில் ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று சபாநாய கர் நடவடிக்கைக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு கோர்ட்டில் வழக்கு தொடரவில்லை.

இதுபற்றி பிரபு எம்.எல்.ஏ. விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதியும், கலைச்செல்வனும் யார் கொடுத்த யோசனையில் கோர்ட்டுக்கு சென்றார்கள் என்று தெரிய வில்லை. இருந்தாலும் கோர்ட்டு எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அது எனக்கும் பொருந்தும்.

நான் அ.தி.மு.க.வில் இருப்பதால் என் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க மாட்டார் என நம்புகிறேன். ஆட்சிக்கு எதிராக நான் செயல்படவில்லை.

திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்க கடிதம் கொடுக்க இருக்கிறேன். அ.தி.மு.க. கட்சிக்கு விரோதமாக செயல்பட மாட்டேன் என்றும் கூறுவேன்.

இதற்கு பிறகும் சபாநாயகர் என் மீது நடவடிக்கை எடுத்தால் அது அ.தி.மு.க.வுக்குதான் இழப்பாகும். காலம்தான் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #3ADMKMLAs

Similar News