செய்திகள்
சரஸ்வதி என்பவரது தோட்டத்தில் சேதமான வாழைகள்.

அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்று - ரூ.10 கோடி வாழைகள் சேதம்

Published On 2019-04-19 08:03 GMT   |   Update On 2019-04-19 08:03 GMT
அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறை காற்று வீசியதால் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்தன.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சில இடங்களில் காற்றும் வனப்பகுதியில் சாரல் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது.

காற்று மட்டும் தான் அடித்ததே தவிர மழை பெய்யவில்லை. இந்த சூறாவளி காற்றால் பல இடங்களில் வாழைகள் அடியோடு சாய்ந்தது.

அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையம் கொல்லபாளையத்தில் சரஸ்வதி என்பவர் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் முற்றிலும் சேதமாகி விட்டன.

இதே போல் கே.மேட்டூரில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகளும், புதுப்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நேந்திதரம் வகை வாழைகளும் அடியோடு சாய்ந்து நாசமானது.

மேலும் எண்ணமங்கலம், சென்னம்பட்டி, கொமராயனூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமானது.

மொத்தம் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமாகி இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News