செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் புகார் - சிபிசிஐடி போலீசாருக்கு குவியும் புகார்கள்

Published On 2019-03-15 13:30 IST   |   Update On 2019-03-15 13:30:00 IST
பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
கோவை:

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவர்கள் பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து இருந்தனர்.

புகார் தெரிவிக்க 94884-42993 என்ற எண்ணையும் தெரிவித்து இருந்தனர். இந்த எண் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஏராளமான புகார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வந்தது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது நேற்று தான் புகார் தெரிவிக்க செல்போன் எண் கொடுத்து இருந்தோம். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து விட்டது.

அவர்கள் பாலியல் பலாத்கார கும்பல் மீது பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்றனர். #PollachiAbuseCase #PollachiCase

Tags:    

Similar News