செய்திகள்

அதிமுக கூட்டணியில் எதிர்பாராத கட்சிகளும் இணையும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2019-03-02 11:55 IST   |   Update On 2019-03-02 13:31:00 IST
அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பாராத கட்சிகளும் இணையும் என்று தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #MinisterKadamburRaju #ADMK #BJP
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியை பார்த்து எதிர்கட்சிகள் ஆடிபோய் உள்ளன. எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடி என பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

முகிலன் வழக்கில் போலீசார் நல்ல நடவடிக்கை எடுப்பார்கள். எங்கள் கூட்டணியில் எதிர்பாராத கட்சிகளும் இணையும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி குறித்து விரைவில் நல்ல தகவல் வரும்.

தி.மு.க. கூட்டணி குழப்ப கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterKadamburRaju #ADMK #BJP

Similar News