செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் செம்மரங்கள்.

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்

Published On 2019-02-04 05:30 GMT   |   Update On 2019-02-04 05:31 GMT
குடியாத்தம் அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1½ டன் செம்மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். #RedSandalwood
குடியாத்தம்:

வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.

காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood

Tags:    

Similar News