செய்திகள்

மோடி வருகைக்கு திமுக எதிர்ப்பு - கோபேக் கோ‌ஷம் வைரலாக பரவியது

Published On 2019-01-27 16:44 IST   |   Update On 2019-01-27 16:44:00 IST
பிரதமர் வருகைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து சமூக வளைதளங்களில் தொண்டர்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர். கோபேக் மோடி என்ற வாசகங்களுடன் பதிவு செய்துள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது. #gobackmodi

சென்னை:

பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வளைதளங்களில் தொண்டர்கள் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.

‘கோபேக் மோடி’ என்ற வாசகங்களுடன் பதிவு செய்துள்ளனர். இது வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே மோடி வந்த போது அதேபோல் எழுப்பப்பட்ட கோ‌ஷம் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

அதேபோல் இந்த முறையும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். கோ பேக் மோடி டேக் டிரெண்டாகி தேசிய அளவில் முதலிடம் பிடித்தது.

இதற்கு பதிலடியாக பா.ஜனதாவினரும் மோடியை மதுரைக்கு வரவேற்பதாக டேக்கை உருவாக்கி அதுவும் டிரெண் டாகி விட்டது. நேற்று இரவு முதல் இந்த டுவிட்டர் தள யுத்தம் நடந்து வருகிறது.

பிரதமர் மோடியை வரவேற்பதில் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி என்று பா.ஜனதாவினர் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் பாகுபலி பட பாடலை வைத்து எடிட் செய்து மதுரைக்கு வந்தாய் அய்யா என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர்.

பதிலுக்கு எதிர்ப்பாளர்கள் மதுரைக்கு போகதடி என்று எசப்பாட்டு பாடி கோ பேக் மோடி டேக்கை வைரலாக்கினார்கள்.

கஜா புயல் பாதிப்பின் போது வரவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது வரவில்லை என்று பதிலுக்கு பதிலாக பதிவிட்டனர். #gobackmodi

Tags:    

Similar News