செய்திகள்
தியேட்டரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்த பெண்கள்

‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்ய வேண்டும்- மதுரையில் பெண்கள் போராட்டம்

Published On 2018-12-11 19:28 IST   |   Update On 2018-12-11 19:28:00 IST
நடிகர் விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்தை தடை விதிக்க வேண்டும் என மதுரையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை:

அண்மை காலமாக பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறும் வகையில் திரைப் படங்கள் வெளி யாகின. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ் டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள் ளன.

மதுரையில் காளவாச லில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்சில் இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ் டர்களை கிழித்தனர்.

பின்னர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப் பட்டது. #tamilnews
Tags:    

Similar News