செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2018-11-01 04:32 GMT   |   Update On 2018-11-01 04:32 GMT
மேட்டூர் அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்துவருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த 30-ந் தேதி 2ஆயிரத்து 538கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,012 கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 4,072 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து ஏற்கனவே காவிரி டெல்டா பாசனத்திற்கு 17ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

அதன்படி காவிரி டெல்டா பாசனத்திற்கு 13ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்திற்கு 850 கனஅடியும் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 98.87 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 98.04 அடியாக சரிந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்தால் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
Tags:    

Similar News