செய்திகள்
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் சிகிச்சை அளிக்கும் காட்சி.

அரசு ஆஸ்பத்திரியில் பெண் துப்புரவு பணியாளர் நோயாளிக்கு சிகிச்சை அளித்தாரா?- வைரலாக பரவும் வீடியோ

Published On 2018-10-30 11:41 IST   |   Update On 2018-10-30 11:41:00 IST
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. #SirkazhiGovtHospital
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வருடத்திற்கு 1500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் பெண் துப்புரவு பணியாளர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அந்த நோயாளிக்கு பெண் துப்புரவு பணியாளர், குளுக்கோஸ் பாட்டில் உடலில் ஏற்றுவதற்காக நரம்பு ஊசியை அவரே செலுத்தி குளுக்கோஸ் பாட்டில் செலுத்துவது தெரிகிறது. இந்த காட்சியை நோயாளியை காண வந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

செவிலியர் அல்லது மருத்துவர் செய்யவேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்யும் வீடியோ காட்சி தற்போது வைரலாக சீர்காழி பகுதியில் பரவி வருகிறது.

இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

சம்பவத்தன்று நோயாளிக்கு டிரிப்ஸ் முடிந்து ரத்தம் வெளியேற பார்த்ததாகவும், அப்போது நோயாளியுடன் வந்த உறவினர்கள் கூறியதன் பேரில் அவசர உதவியாக துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் ஊசியை நீக்கி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.  #SirkazhiGovtHospital

Tags:    

Similar News