செய்திகள்

என்ஜினில் திடீர் கோளாறு: காரைக்குடியில் இருந்து தாமதமாக புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் - பயணிகள் அவதி

Published On 2018-10-21 10:53 IST   |   Update On 2018-10-21 10:53:00 IST
ரெயில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக காரைக்குடியில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் 2 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. #Train

காரைக்குடி:

காரைக்குடியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு தினமும் சென்னைக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் செல்கிறது. வழக்கம் போல் இன்று காலை 5.05 மணிக்கு ரெயில் புறப்பட தயாரானது.

அப்போது தான் என்ஜினில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் என்ஜினில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சிக்கு பலன் இல்லை.

எனவே திருச்சியில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 7.35 மணியளவில் 2 1/2 மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். #Train

Tags:    

Similar News