செய்திகள்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ரன்வீர்ஷாவின் வக்கீல் ஆஜர்

Published On 2018-10-05 09:43 GMT   |   Update On 2018-10-05 09:43 GMT
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ரன்வீர்ஷாவுக்கு பதில் அவரது வக்கீல் தங்கராசு ஆஜராகி விளக்கம் அளித்தார். #IdolWingRaids #PonManickavel

சென்னை:

சைதாப்பேட்டையைச் சேர்ந்த தொழில் அதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் பங்களாக்களில் நூற்றுக்கணக்கான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் கற்சிலைகள், துண்கள் உள்ளிட்ட 91 வகையான பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டன. மேல்மருவத்தூர் மற்றும் படப்பை பகுதிகளில் உள்ள பண்ணை வீடுகளில் இருந்து 132 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சிலை தடுப்பு பிரிவு போலீசார் ரன்வீர்ஷாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் இன்று காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ரன்வீர்ஷாவுக்கு பதில் அவரது வக்கீல் தங்கராசு ஆஜரானார். அவர் ரன் வீர்ஷாவால் நேரில் வர முடியாதது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் விளக்கினார்.

ரன்வீர்ஷாவின் தந்தை மரணம் அடைந்து விட்டதால் அவரால் இன்று வர முடியவில்லை என்றும் வருகிற 28-ந்தேதிக்கு பிறகு ஆஜராவார் என்றும் கூறியுள்ளார். #IdolWingRaids #PonManickavel

Tags:    

Similar News