செய்திகள்

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2018-09-26 14:01 GMT   |   Update On 2018-09-26 14:01 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள காரணி பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 20). இவர் தனது காதல் கணவருடன் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இன்று மதியம் மனு கொடுக்க வந்தார்.

போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்க வைத்திருந்த  மனுவில் ரம்யா கூறியிருப்பதாவது:-

நான் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்தேன். அதே கம்பெனியில் கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (21) என்பவரும் வேலைபார்த்து வந்தார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 

இதைத்தொடர்ந்து நானும் எனது காதலர் ராமச்சந்திரனும் பரங்கிப்பேட்டையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News