செய்திகள்

புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை - திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

Published On 2018-09-10 03:16 GMT   |   Update On 2018-09-10 03:16 GMT
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. #BharathBandh #PetrolDieselPriceHike #Puducherry
புதுச்சேரி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.

புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #BharathBandh #PetrolDieselPriceHike #Puducherry
Tags:    

Similar News