செய்திகள்
காஞ்சீபுரத்தில் அண்ணா இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
காஞ்சீபுரத்தில் அண்ணா இல்லத்தில் மரியாதை செலுத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘கலைஞர் வழியில் கட்சியை கட்டிகாப்பேன்’’ என்று கையெழுத்திட்டார். #DMK #MKStalin
காஞ்சீபுரம்:
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றபின் மு.க. ஸ்டாலின் முதன் முறையாக காஞ்சிபுரம் வந்தார். அவர் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் தி.மு.க. பொருளாளர் பதவியேற்ற துரைமுருகனும் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
மு.க.ஸ்டாலின், நினைவு இல்லத்தில் உள்ள பார்வையாளர் வருகைப் பதிவேட்டுப் புத்தகத்தில் தமிழகத்திற்கு தமிழகம் எனப் பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் இல்லத்திற்கு தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றபின் வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் புத்துணர்ச்சி பெறுகின்றேன்.
அண்ணா வழியில் கலைஞர் வழியில் அவர்கள் கட்சியை கட்டிக்காத்து வந்த சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகியவற்றை கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற பாடுபடுவேன் என உறுதியேற்கிறேன்’ என்று எழுதிக் கையெழுத்திட்டார். முன்னதாக காஞ்சீபுரம் வந்த மு.க.ஸ்டாலினுக்கு பொன்னேரிக்கரைப் பகுதியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா,மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, சி.வி.எம்.பி. எழிலரசன், நிர்வாகிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சி.வி.எம்.அ. சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறு வேடல் செல்வம், சுகுமார், பி.எம்.குமார், அபுசாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #DMK #MKStalin