செய்திகள்
பிரம்ம கமலம்

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பிரம்ம கமலம் மலர்

Published On 2018-07-28 10:29 GMT   |   Update On 2018-07-28 10:29 GMT
ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

வாழப்பாடி:

எபிபைலம் ஆக்ஸிபெட்டலம் எனும் தாவரவியல் பெயர் கொண்ட கள்ளி வகையை சேர்ந்த தாவரம், ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இத்தாவரம், இந்தியாவிலும் பரவலாக காணப்படுகிறது. ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்றுள்ள கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆத்தூரில் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி வி. ஜான்சி தோட்டக்கலைத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

இருவரும் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மனோரஞ்சிதம், செண்பகம், நாகலிங்கம், பல்வலிப்பூண்டு, சீனி துளசி, அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு அரிதாகி வரும் அரியவகை மூலிகை தாவரங்களை தேடிப்பிடித்து வளர்த்து வருகின்றனர். குறிப்பாக, ஆன்மீக தன்மை கொண்டதாக கருதப்படும் பிரம்ம கமலம் தாவரத்தை அந்தமானில் இருந்து கொண்டு வந்து, 6 ஆண்டுகளாக வீட்டு தோட்டத்தில் வளர்த்து வருகின்றனர்.

அந்த தாவரத்தில் ஆண்டு ஒருமுறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்கள் தற்போது பூத்து குலுங்குறது. அந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். #BrahmaKamalamFlower

Tags:    

Similar News