செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய போலீஸ்காரர் சஸ்பெண்டு

Published On 2018-07-24 16:05 IST   |   Update On 2018-07-24 16:05:00 IST
கோவையில் குடி போதையில் வாகனம் ஓட்டிய போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார்.
கோவை:

கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் வினோத் (35). இவர் கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

அவர் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை வழி மறித்து நிறுத்தி உள்ளனர்.

அவர் குடி போதையில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் போலீஸ்காரராகிய நீங்கள் குடி போதையில் சீருடையில் மோட்டார் கைக்கிளை ஓட்டி செல்கிறீர்களே? என கேட்டு உள்ளனர்.

அதற்கு போலீஸ்காரர் வினோத் பதில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சற்று நேரத்தில் அங்கிருந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

குடிபோதையில் போலீஸ்காரர் சீருடையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. இந்த தகவல் உயர் அதிகாரிகள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கவனத்துக்கும் சென்றது.

அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது போலீஸ்காரர் வினோத் ஏற்கனவே குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார். #Tamilnews
Tags:    

Similar News