செய்திகள்
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் சென்ற கலெக்டர் தண்டபாணி.

விருத்தாசலம் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள அரசு பஸ்சில் சென்ற கலெக்டர்

Published On 2018-06-27 06:48 GMT   |   Update On 2018-06-27 06:48 GMT
விருத்தாசலம் அருகே கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாரிகள் கார் மூலம் சென்று வந்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகத்துக்கு அதிக செலவு ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் அரசு பஸ்சில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தையடுத்த ராஜேந்திர பட்டினத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் மற்றும் மனுநீதிநாள் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா உள்பட அரசு அதிகாரிகள் இன்று காலை அரசு பஸ்சில் புறப்பட்டனர்.

இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் அரசு பஸ் மூலம் செல்வதால் அதிகாரிகள் அனைவரும் ஒரே பஸ்சில் சென்று கலந்து கொள்கின்றனர். இதனால் அதிகாரிகள் காலதாமதம் இன்றி முகாமில் கலந்து கொள்கின்றனர். கலெக்டர் தண்டபாணி அரசு பஸ் மூலம் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்பது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Tags:    

Similar News