செய்திகள்

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் ரத்து- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-06-14 14:44 IST   |   Update On 2018-06-14 14:44:00 IST
மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இன்று மதியம் விசாரித்தது. அப்போது துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து துணைவேந்தரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டனர். #HighCourt
Tags:    

Similar News