செய்திகள்

புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்கள் பறிமுதல்

Published On 2018-06-10 18:48 IST   |   Update On 2018-06-10 18:48:00 IST
சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 750 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் அருகே உள்ள ஆளத்தூரில் இன்று அதிகாலை கோட்டக்குப்பம் சரக மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் அரிகரன், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். உள்ளே 12 அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் அதனை திறந்து பார்த்தபோது மதுப்பாட்டில்கள் இருந்தன. மொத்தம் 750 மதுப்பாட்டில்களும், 50 லிட்டர் சாராயமும் இருந்தது.

இதைத்தொடர்ந்து காரில் இருந்த சென்னை முகப்பேறு பகுதியை சேர்ந்த தியாகு (வயது 30), புதுவையைச் சேர்ந்த பாபு (30) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்கள் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றது தெரியவந்தது.

போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்தனர். மேலும் மதுப்பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

Tags:    

Similar News