செய்திகள்

புதுவை பெரிய மார்க்கெட் குடோன்களில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ பழங்கள் பறிமுதல்

Published On 2018-06-01 09:43 GMT   |   Update On 2018-06-01 10:26 GMT
புதுவை பெரிய மார்க்கெட் குடோன்களில் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைத்த 500 கிலோ பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று காலை பெரிய மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தலைமையில் பழக்கடைகளுக்கு சொந்தமான குடோன்களில் வேதி பொருட்கள் (கார்ப்பைட் கல்) மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பழங்கள் கார்ப்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்தை கண்டு பிடித்தனர். இதையடுத்து 500 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக நேற்று புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு ரங்கப்பிள்ளை வீதி உணவு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது கடைகளில் குட்கா, பான்பராக் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News