செய்திகள்
என்.எல்.சி.சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Published On 2018-05-29 06:29 GMT   |   Update On 2018-05-29 06:29 GMT
பணிநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். சுரங்கம் 1ஏயில் பல ஆண்டு காலமாக பணியாற்றி வந்த சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் பணிநாட்கள் 26 நாட்களுக்கு பதிலாக 15 நாட்கள் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று என்.எல்.சி.சுரங்கம் 1ஏ முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் போராட்டம் நடத்த வந்தனர். பின்னர் 25 பேர் திடீரென்று வி‌ஷத்தை குடித்து கீழே மயங்கி விழுந்தனர்.

உடனே அவர்களை மீட்டு என்.எல்.சி.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மோசமாக இருந்தது. அவர்களை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இன்று காலை ஒப்பந்த தொழிலாளர்கள் 700 பேர் சுரங்கம் 1ஏ பகுதிக்கு வந்தனர். பின்பு அவர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

வேலைநாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்தும், பணிமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே இடத்துக்கு பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

இதற்கிடையே இன்று மாலை மாவட்ட கலெக்டர் தண்டபாணி என்.எல்.சி.ஒப்பந்த தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். #Tamilnews
Tags:    

Similar News