செய்திகள்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சேதம் அடைந்த வாகனங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது

Published On 2018-05-24 09:04 GMT   |   Update On 2018-05-24 09:04 GMT
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியே சேதம் அடைந்த பொருட்கள், வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. #sterliteprotest
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பின்னர் அது கலவரமாக மாறியது. கலவரத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் ரோட்டோரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

50-க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ‘ஏ.டி.எம்.’ சூறையாடப்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தின்போது கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளியே சேதம் அடைந்த பொருட்கள் மற்றும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.



சுகுமார் தலைமையிலான பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழு கலெக்டர் அலுவலகம் மற்றும் சேதம் அடைந்த வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதே போன்று மற்றொரு குழு மாவட்ட தொழில் மையம் அருகே ஏற்பட்ட சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.

இக்குழுவில் வருவாய் மற்றும் போலீஸ் துறைகளை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பு நடத்தி சேத விவரங்களை இன்று அரசிடம் தாக்கல் செய்ய உள்ளனர். இந்த தகவலை அதிகாரி சுகுமார் தெரிவித்தார்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையிலான குழு போராட்டத்தின்போது தீவைத்து எடுக்கப்பட்ட வாகனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர். எரிக்கப்பட்ட வாகனங்களின் மாதிரிகள் தடயவியல் நிபுணர்கள் சேகரித்து வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. #sterliteprotest
Tags:    

Similar News